சுமார் ஒரு மாத இடைவெளிக்கு பின் மத்திய அரசு ஊழியர்கள் இன்று மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ளன. இரண்டு மாநகர பேருந்துகள் மூலம் குடியிருப்பு பகுதியில் இருந்து ஊழியர்கள் அழைத்துவரப்பட்டனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வைத்திருக்கும் ஊழியர்கள் தாமாகவே அலுவலகத்திற்கு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post