தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 1லட்சத்து 7ஆயிரத்து 193 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளதாகவும் 85 ஆயிரத்து 253 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரத்து 876 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 31 ஆயிரத்து 853 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. புதிதாக 105 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 46 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துனர். இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 411 ஆக அதிகரித்துள்ளது.
Discussion about this post