மதுரையில் ரேபிட் கிட் உதவியுடன் கொரோனா தொற்று பரிசோதனை முதற்கட்டமாக துவங்கியுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு மொத்த விலையில் விற்கப்படும் பரவை தினசரி காய்கறி சந்தையில், இரவு நேரத்தில் சமூக விலகல் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு 5 கிலோ விலையில்லா அரிசி மற்றும் காய்கறிகள் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மதுரையில் ரேபிட் கிட் உதவியுடன் கொரோனா தொற்று பரிசோதனை முதற்கட்டமாக துவங்கியுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமையான இன்று இறைச்சி மற்றும் மீன்கடைகள், தடையை மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்தார்.
Discussion about this post