கேரள மாநிலம் மூணாறில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை 20ம் தேதி முதல் திறக்க தேவிகுளம் துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் மூணாறில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், மக்கள் போதிய சமூக இடைவெளியின்றி பொருட்கள் வாங்கிச் செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. அதனடிப்படையில், கடந்த 9ம் தேதி முதல் 7 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை மூட தேவிகுளம் துணை ஆட்சியர் பிரேம் கிருஷ்ணன் உத்தரவிட்டார். தடை உத்தரவு முடிந்த நிலையில், வியாபாரிகளுடன் தேவிகுளம் துணை ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆட்சியர், வரும் 20ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post