கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து மாவட்டங்களில் தற்போது உள்ள நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். காணொலி மூலமாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
Discussion about this post