கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு, ரஃபேல் போர் விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு படையின் பலத்தை அதிகரிக்கும் வகையில், பிரான்சிடம் இருந்து 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குகிறது. மே மாதம் இறுதியில் ரஃபேல் விமானங்கள் இந்தியா வர வேண்டியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமானங்கள் வருவதில் மேலும் சில வாரங்கள் தாமதம் ஏற்படும் என தகவல் வெளியாகி உள்ளது. போர் விமானங்களை இந்தியாவுக்கு அனுப்பும் அம்பாலா விமானப்படை தளத்தில் இன்னும் சில பணிகள் முடிவடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு வந்து சேரும் தேதியை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post