அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை சேத்துபட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் பொது விநியோக திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, வெளிச் சந்தையை விட குறைந்த விலைக்கு வாங்கி மளிகை பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி 97 புள்ளி 45 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாகவும், நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி 74 சதவிகிதம் முடிந்துள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Discussion about this post