சவால்கள் நிறைந்த காலத்தை, முதலமைச்சரின் வரும்முன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தோற்கடிக்க, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றிலிருந்து வருமுன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கள நிலவரங்களை உடனடியாக அறிந்து போர்க்கால அடிப்படையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். மக்களிடம் எழும் சந்தேகங்களுக்கு குரல்வழி சேவையின் மூலம் விளக்கமளிக்கும் முன்னோடி திட்டத்தை, முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். சவால்கள் நிறைந்த காலத்தை முதலமைச்சரின் வருமுன் காப்போம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தோற்கடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post