மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெட்ரோலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள், பெட்ரோல் நிலைய உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில், பெட்ரோல் மற்றும் டீசலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். அந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிய 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதாகி நின்றுள்ளன. இதனால் பெட்ரோல் நிலைய உரிமையாளருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அப்போது காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதாகவும், இதனால் தான் தவறு நடந்திருப்பதாகவும் உரிமையாளர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, தினமும் பெட்ரோலை பரிசோதனை செய்த பின்னரே விநியோகிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Discussion about this post