இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால், புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலகுக்கே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸுக்கு, இத்தாலியில் பதினாறாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருத்துவமனைகள் இல்லாத நிலையில், மற்ற நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், பொது வார்டுகள், புற்றுநோய், இதய நோய் உள்ளிட்ட சிறப்பு வார்டுகளும், கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக கீமோதெரப்பி சிகிச்சை எடுக்கக்கூடிய ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகள், சிகிச்சை எடுக்கமுடியாமல் தவிக்கின்றனர். மேலும், கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய 64 சதவீத நோயாளிகளுக்கும் சிகிச்சைக்கான தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post