கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களுக்கு உபகரணங்கள் தாமதம் இன்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இதுவரை நாடு முழுவதும், அரசுக்கு சொந்தமான 129 ஆய்வகங்களும், தனியாருக்கு சொந்தமான ஆயிரத்து 334 ஆய்வகங்களும் இயங்கி வருகின்றன. நாள் ஒன்றுக்கு இந்த ஆய்வகங்களில் 13 ஆயிரம் ரத்த மாதரிகள் மட்டுமே பரிசோதனை செய்ய இயலும். இந்நிலையில், கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களை அதிகரிப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களுக்கு உபகரணங்கள் தாமதம் இன்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும், கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Discussion about this post