கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதிக்காக பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள், மார்ச் 31 ஆம் தேதி வரை 36 கோடியே 34 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள நன்கொடை விவரங்களின் படி, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 5 கோடி, சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி, ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் 2 கோடி, சிம்சன்ஸ் நிறுவனம் சார்பில் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகம் 1 கோடி, திமுக அறக்கட்டளை 1 கோடி, நேஷனல் 1 கோடி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், வளர்ச்சி நிறுவனம், செய்திதாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஜிஆர்டி ஜுவல்லரி, டிஎல்ஃப், அக்னி ஸ்டீல்ஸ், எஸ்விஎஸ் ஆயில் நிறுவனம், காஞ்சி காமகோடி பீடம்,மெட்ராஸ் டாக்கிஸ், ஜிவிஜி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களும் தனிநபர்களும் நிதியுதவி வழங்கியுள்ளனர். கொரோனா நிவாரணத்திற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, மார்ச் 31 ஆம் தேதி வரை, 36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், நன்கொடை அளித்த அனைவருக்கும் தனித்தனியே ரசீது அவ்வப்போது வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Discussion about this post