வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அண்மையில் நடந்த மத பிரசார கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மீது எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 1ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள நிசாமுதின் பகுதியில் மதப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இதில் கலந்து கொண்டவர்களுக்கு அதிகளவில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதில் பங்கேற்ற சுமார் 200 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த கூட்டத்திற்க்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்க உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Discussion about this post