வெளிமாநில தொழிலாளர்களுக்கு 12 கிலோ ரேஷன் பொருட்களும், பணமும் வழங்கப்படுமென தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்து வருகின்றன. தெலங்கானா மாநிலத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு 12 கிலோ அரிசியும், குடும்பத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் அல்லது தனி நபருக்கு 500 ரூபாய் பணமும் வழங்கப்படுமென அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலத்தில் இருந்து பணிக்கு வந்தவர்களை தங்களது குடும்பத்தினராக பாவித்து தெலங்கானா அரசு கவனித்து கொள்ளுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா மக்கள் இதேபோல் சுயகட்டுபாட்டுடன் நடந்து கொண்டால் வரும் ஏப்ரல் 7 தேதியன்று தெலங்கானா மாநிலத்தில் இருந்து கொரோனாவை முழுவதுமாக விரட்டியடிக்க முடியுமெனவும் அவர் கூறினார்.
Discussion about this post