செவ்வாய் கிரகத்திற்குள் நுழைபவர்கள் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாவார்கள் என நாசா கவலையடைந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நம்பிக்கையுடன் உள்ளது.
இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து வரும் நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு செல்லும்போது புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் இரு மடங்கு காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் செவ்வாய் கிரகத்திற்குள் நுழையும் போது பூமியில் இருப்பதை காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமான கதிர்வீச்சு தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது.
இதனால் செவ்வாய் கிரகத்திற்குள் மனிதர்கள் நுழையும் போது , ‘வயிறு மற்றும் குடல்களில் பெரும் சேதம் ஏற்படலாம் என கருதப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் அல்லது புற்றுநோயை உறிஞ்சும் இயலாமை போன்றவையால் மனிதர்கள் இறக்கவௌம் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிகளை சோதனைக்குள்ளாக்கி பார்த்ததில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.
இதனிடையே ‘ஸ்பேஸ் எக்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் முதன் முறையாக சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post