கோவையில் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் ராசமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அதன்பிறகு, அரசு மருத்துவமனையிலுள்ள அம்மா உணவகத்தில் அமைச்சர் உணவு உட்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஈ.எஸ்.ஐ.மருத்துவனையில் 540 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஈ.எஸ்.ஐ சார்பாக 100 வெண்டிலேட்டர்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post