புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 31ம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்படும் என மாநில அரசு அறிவித்ததை தொடர்ந்து புதுச்சேரி மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. இதனை கண்ட பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மக்கள் கூடுவதை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது மேலும் 31ம் தேதி வரை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இந்நிலையில் மதுபான கடைகள் இயங்காது என்பதை அறிந்த குடிமகன்கள் மதுபான கடைகளுக்கு படையடுக்க துவங்கி விட்டனர். இதனால் புதுச்சேரியில் உள்ள பல்வேறு மதுபான கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் குடிமகன்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post