கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து திரும்பிய தனிமைப்படுத்தப் பட்டவர்கள், வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் என, தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். ஆனால் சிலர் அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
Discussion about this post