கடந்த சில நாட்களுக்கு முன் கோயம்புத்தூர் விமானநிலையத்திற்கு ஈரோட்டிலிருந்து சென்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சளி,காய்ச்சல் இருப்பதைக் கண்டறிந்த பரிசோதனைக் குழுவினர் அவர்களை உடனடியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையிலுள்ள கொரோனோ தனிச்சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ரத்த மாதிரிகளின் முடிவு வெளியான நிலையில் இருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் தனிச்சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு நோய்க்கான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் ஈரோட்டில் தங்கியிருந்த மசூதிகளில் அவர்களுடன் தங்கியிருந்தவர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post