கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு, வைரஸ் பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது.
லண்டனில் இருந்து கடந்த 9ம் தேதி மும்பை வந்தடைந்த கனிகா கபூர், கடந்த 15ம் தேதி லக்னோவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கனிகாவுக்கு காய்ச்சல் இருந்த நிலையில், கடந்த 20ம் தேதி அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அவர் அலட்சியமாக இருந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கனிகாவுடன் விருந்தில் பங்கேற்ற ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும், எம்பியுமான துஷ்யந்த் சிங் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர். கனிகா கபூருடன் தொடர்பில் இருந்த 162 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்ட நிலையில், வசுந்தரா உட்பட 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post