கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் மெரினா, திருவான்மியூர், பாலவாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது. இதேபோல் புதுச்சேரியில் உள்ள கடற்கரைகளுக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post