நடிகர் விஜய், சினிமாவில் முதலமைச்சராக வேடம் போடலாம், ஆனால் நிஜத்தில் முதலமைச்சராகும் தகுதி கிடையாது என வருவாய்த் துறை அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என்று கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான மண் பரிசோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர் ,தோப்பூர் அருகே துணைக்கோள் நகரமும் உருவாக இருப்பதாக கூறினார்.
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நவடிக்கைகளும் எடுக்கப்படுள்ளதாகவும், இதற்காக 4 ஆயிரத்து 399 இடங்களில் மீட்பு குழு அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நடிகர் விஜய் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசியலில் குதித்து அடிபடாமல் இருந்தால் அவர் சமத்துதான் என்றார். நடிகர் விஜய் முதல்வராக வேடம் போடலாம், ஆனால் முதலமைச்சராவதற்கான தகுதி அவருக்கு கிடையாது என்று அவர் கூறினார்.
அதிமுக அரசை எதிர்த்து பேசி ஹீரோவாகலாம் என பலர் நினைப்பதாக அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் அரை நூற்றாண்டு காலமாக அரசியலில் தொண்டர்களாக இருந்ததையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சுட்டிக்காட்டினார்.
Discussion about this post