கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, கோவில்கள், கடைவீதிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் தெளிக்கப்பட உள்ளது. இதற்காக 15 கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வீடு வீடாக சென்று மாநகராட்சி சுகாதார துறை ஊழியர்கள் மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளதாக கூறியுள்ளார். மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post