தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டு மொத்த உலகமும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடும் அச்சுறுத்தலை சந்தித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ள வழிமுறைகளை தமிழக மக்கள் கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 65வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் சில வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் நாளை மக்கள் சுய ஊரடங்கு உள்ளிட்டவைகளை கடைபிடிக்க கேட்டுக்கொண்டுள்ளார். அதே போன்று, கொரோனாவை கட்டுப்படுத்த இரவு பகலாக செயல்பட்டு வரும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாளை மாலை 5 மணிக்கு பொது மக்கள் தங்கள் இல்லங்களில், 5 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைத்தட்டி ஊக்கப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அந்தந்த பகுதி நிர்வாகத்தினர், 5 மணிக்கு, இதனை துவக்கும் விதமாக சைரன் ஒலி எழுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார். அதே போன்று, தமிழக அரசின் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளதற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Discussion about this post