கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து, பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரையாற்றுகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. கொரோனா மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய-மாநில அரசுகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு நாட்டுக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த உரையின்போது, பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post