விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கடந்த 13 ஆண்டுகளாக பழங்கால நாணயங்களை தேடி சேகரித்து வரும் விவசாயி, தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை நாணயங்களை பாதுகாத்து வருகிறார். ஊரணிதாங்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயியான குமார், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூட்டை தூக்கும் பணியும் செய்து வருகிறார். இவர் கடந்த 2007-ம் ஆண்டு கோயிலுக்கு சென்று திரும்பிய போது, கீழே கிடந்த மிகச்சிறிய நாணயத்தை எடுத்துச் சென்று, வரலாற்று ஆய்வாளர்களிடம் அது குறித்து கேட்டுள்ளார். அந்த நாணயம் 500 ஆண்டுகள் முன்பு செஞ்சியை ஆண்டவிஜயநகர நாயக்க மண்ணர்கள் காலத்து நாணயம் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பழங்கால நாணயங்களை சேகரிக்கும் ஆர்வத்தில், குமார் கடந்த 13 ஆண்டுகளாக பல நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார். அவற்றில், அரபு நாட்டு வெள்ளி நாணயங்கள், ஆங்கிலேயேர் காலத்தில் வெளியிடப்பட்ட தங்க, வெள்ளி நாணயக்கள் என பல்வேறு வகையான நாணயங்களும் அடங்கும். இவ்வாறு சேகரிக்கப்படும் நாணயங்களை விற்பனை செய்யாமல் மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தொடர்ந்து பாதுகாத்து வருவேன் என குமார் கூறியுள்ளார்
Discussion about this post