துபாய், அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த இரண்டு விமானங்களில் 44 பயணிகளுக்கு காய்ச்சல், சளி தொல்லை, சுவாசிப்பதில் சிரமம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களை விமான நிலையத்தில் இருந்து வெளியே அனுப்பாமல், அங்குள்ள அறையில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஒரு பெண் உள்ளிட்ட 24 பேர் 5 சிறப்பு ஆம்புலன்ஸ்கள் மூலம் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் 4 பெண்கள் உள்ளிட்ட 20 பேர், தாம்பரம் சானிடோரியம் சிறப்பு மருத்துவ முகாமிற்கு, 3 ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். சிறப்பு மருத்துவ முகாம்களில் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பிற்கு பின்பு, பாதிப்பு இல்லாதவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 14 நாட்கள், அந்தந்த பகுதியில் உள்ள பொது சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் அவர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post