ஆர்.டி.ஓ அலுவலகங்களில் புதிய ஓட்டுநர் உரிமம், எல்.எல்.ஆர் வழங்குவது, இம்மாதம் 31ம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினி பயன்படுத்தவும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு முகக் கவசம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
Discussion about this post