கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அரசு செயல்படுத்தி வரும் உத்தரவுகளை கண்காணிக்க தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர், வருவாய் துறையின் முதன்மைச் செயலாளர், ரயில்வே மேலாளர், விமான நிலைய இயக்குனர் உள்ளிட்ட 18 பேர் இடம் பெற்றுள்ளனர். அரசின் உத்தரவுகளை கண்காணிக்கவும் செயல்படுத்தவும், தொடர்ந்து கூட்டங்களை நடத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த குழு, மேற்கொள்ளும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post