குஜராத் மாநிலத்தில் விரைவில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவின் மாரு, பிரத்யூமன்சிங் ஜடேஜா, சோமா கோலி பட்டேல், ஜே.வி.கக்காடியா மற்றும் மங்கள் காவித் ஆகிய எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து குஜராத் மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர்.
Discussion about this post