தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டுமென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை துறைமுகம் மருத்துவமனையில் ஆய்வு நடத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் வணிக வளாகங்கள் மட்டுமே மூடப்படும் என்றும், காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட சிறிய கடைகள் அனைத்தும் திறந்திருக்குமெனவும் கூறினார்.
Discussion about this post