என்பிஆர் விவகாரத்தில் தமிழக அரசு தனது அதிகார வரம்புக்குள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, போராட்டம் நடத்தும் அமைப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு நேரமில்லா நேரத்தில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டம், என்பிஆர், என்ஆர்சி குறித்து, மாநில அரசின் அதிகார வரம்புக்குள் எடுத்து வரப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக, தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், போராட்ட அமைப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறினார்.
Discussion about this post