மனித குலத்திற்கு உதவும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பிரான்சஸ் ஹெச். அர்னால்டு, ஜார்ஜ் பி. ஸ்மித், சர் கிரிகோரி பி வின்டர் ஆகிய 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
3 பேரில் பிரான்சஸ் அர்னால்டு என்ற பெண், வேதியியலுக்கான நோபல் பரிசு பெறும் 5 வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொரு வெற்றியாளரான ஜார்ஜ் பி. ஸ்மித், மிசோரி பல்கலைக்கழத்திலும், சர் கிரிகோரி பி.வின்டர் Cambridge இல் உள்ள Molecular Biology ஆய்வகத்திலும் பணியாற்றுகின்றனர்.
Discussion about this post