அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எதிரொலியால், அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனாவின் ஊகான் நகரில் உருவெடுத்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 115 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்காவில், கலிஃபோர்னியா, வாஷிங்டன் மாகாணங்களில் பெருமளவிலான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இதுவரை சுமார் 40 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்தநிலையில், அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதன்மூலம், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும், பரிசோதனை நடத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதற்காக, வகுப்புகள், விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, 50 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Discussion about this post