கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து அனைத்து நாடுகளுக்கும் சுற்றுலா விசாக்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். வைரஸை கட்டுப்படுத்த அந்தந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில், அனைத்து நாடுகளின் சுற்றுலா விசாக்களும் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 15-ந் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post