அன்னா ஹசாரே நடத்த இருந்த உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லோக்பால், லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தொடர்ந்து போராடி வருகிறார். லோக்பால், லோக் ஆயுக்தாவை அமைக்காவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று, காந்தி நினைவு நாளான கடந்த ஜனவரி 30ஆம் தேதி அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி, நேற்றைய தினம் மராட்டிய மாநிலம் ரலேகான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அன்னா ஹசாரே திட்டமிட்டிருந்தார். ஆனால், இது தொடர்பாக மராட்டிய அமைச்சர் கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து, அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தார்.
இதனால், நேற்று தொடங்க இருந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை, அன்னா ஹசாரே தற்காலிகமாக ஒத்திவைத்தார். மேலும், மத்திய அரசு இனியும் காலதாமதம் செய்தால், காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி தேசிய அளவில் போராட்டம் நடத்துவேன் என்றும் அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்தார்.
Discussion about this post