ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் அரையிறுதி போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இறுதிபோட்டிக்கு முன்னேறியது.
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், இரு கட்டங்களாக அரையிறுதி ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, அதிக கோல் சராசரி அடிப்படையில் வெல்லும் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். பெங்களூருவில் நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதியில் பெங்களூரு அணி, கொல்கத்தா அணியை 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கொல்கத்தா அணி 30, 63, 79 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்து அசத்தியது. பெங்களூரு அணி, 5வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தது.
Discussion about this post