டெல்லி வன்முறை தொடர்பாக குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாக செய்தி ஒளிபரப்பிய, கேரளாவை சேர்ந்த 2 தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய அரசு 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.
வடகிழக்கு டெல்லியில் அண்மையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வன்முறையில், 53 பேர் பலியாகினர். வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்நிலையில், கேரளாவில் செயல்பட்டு வரும் ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் ஆகிய தொலைக்காட்சிகள், வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல் குறித்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவாகவும் செய்தி ஒளிபரப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் 48 மணி நேரம் தடை விதிக்கப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Discussion about this post