மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகஸ்ட் 7-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
55 நாட்கள் வேலூர் சிறையில் இருந்த அவர், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சென்னை எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றங்கள் அவருக்கு பிணை வழங்கின.
இதனையடுத்து இன்று மாலை வேலூர் சிறையில் இருந்து விடுதலையானர். மே 17 இயக்கம், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரை சிறை வளாகத்தில் மாலை அணிவித்து வரவேற்றனர்.
Discussion about this post