கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணையின் படி 0.1 சதவீத கோவில் நிலங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஸ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களில், 600 ஏக்கர் நிலங்கள் மட்டுமே பயன்படுத்த இருப்பதாகவும், இந்த நிலங்கள் ஏழைகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் பதில் மனுவுக்கு, பதிலளிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை மார்ச்16 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Discussion about this post