மதுரை விமான நிலையத்தை 700 கோடி செலவில் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கின.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களுக்கு உள்நாட்டு சேவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சுமார் 700 கோடி மதிப்பில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.
விமான நிலைய இயக்குநர் பி.வி ராவ் மற்றும் மத்திய போக்குவரத்துறை செயலர் ஆர்.என் செளபே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Discussion about this post