கடந்த ஒரு வார காலமாக பதற்றமாக காணப்பட்ட தலைநகர் டெல்லி, தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால், டெல்லியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் நேற்று வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், வன்முறை பாதித்த பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலையில் கடைகளும் பிற நிறுவனங்களும் திறந்திருந்தன. இதன்மூலம் அப்பகுதிகளில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பிக் கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட வகுப்புவாத மோதல்களின் காரணமாக தெருக்களில் வீசப்பட்டிருந்த செங்கற்கள், உடைந்த கண்ணாடி உள்ளிட்ட சிதறிக் கிடந்த பல்வேறு பொருட்களை அகற்றும் பணியில் டெல்லி மாநகாரட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடைகள் மற்றும் பிற நிறுவனங்கள் சில இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். ஏராளமானோர் தங்களது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
Discussion about this post