சென்னை அருகே காட்டுப்பள்ளியில், கடலோர காவல்படைக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வஜ்ரா ரோந்து கப்பல் நேற்று கடலில் இறக்கப்பட்டது.
வஜ்ரா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கப்பல் 3 மாத காலம் தற்காலிகமாக ரோந்து பணியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. வஜ்ரா கப்பலில் 14 அதிகாரிகள், 88 வீரர்கள் என மொத்தம் 102 பேர் பணியில் இருப்பார்கள். 2 ஆயிரத்து 100 மெட்ரிக் டன் எடையும், 98 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட வஜ்ரா கப்பல், அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியதாகும்.
கரைக்குத் திரும்பாமலேயே சுமார் 5 ஆயிரம் கடல் மைல் தூரம் பயணிக்கும் வகையில், பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் வஜ்ரா கப்பலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிநவீன ரக துப்பாக்கிகள் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளும் இந்த கப்பலில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கப்பலின் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வசதி ஒரே அறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஹெலிகாப்டர் இறங்கும் தளங்களும், மாசுக் கட்டுப்பாட்டுக் கருவிகளும் உள்ளிட்டவை இந்த கப்பலில் அமைக்கப்பட்டுள்ளது கூடுதல் அம்சமாக பார்க்கப்படுகிறது.
Discussion about this post