ராணுவ மரியாதையுடன் நடந்த முன்னாள் எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அந்நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
91 வயதான ஹோஸ்னி முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக எகிப்தின் அதிபராக பதவியில் இருந்தார். நவீன எகிப்தின் தந்தை என அழைக்கப்படும் முபாரக் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, உயிரிழந்தார். இதனையடுத்து ராணுவ மரியாதையுடன் நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் தற்போதை அதிபர் அப்தெல் ஃபட்டா உள்பட அந்நாட்டு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதில், பங்கேற்ற எகிப்து மக்கள் அவரது படத்துடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், முன்னாள் அதிபரின் மறைவுக்கு அந்நாட்டில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post