கொரோனா பாதித்த வூகான் மாகாணத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட 120 பேரை, இந்தோ-திபெத் மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து வெளிநாட்டினர் மற்றும் இந்தியர்கள் உட்பட 120 பேரை மத்திய அரசு அழைத்து வந்துள்ளது. டெல்லி வந்த அவர்கள் சவ்லா பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
அவர்கள் அனைவரும் சில நாட்கள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அவர்கள் விடுவிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
Discussion about this post