மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நியூஸிலாந்தை இன்று எதிர்கொள்கிறது.
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் ஏ, பி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று வலுவான அணியாக உள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் தனது 3 வது லீக் போட்டியில் இந்தியா, நியூஸிலாந்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல், முதல் போட்டியில் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் காணப்படும் சோஃபி டிவைன் தலைமையிலான நியூஸிலாந்து மகளிர் அணியினர் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இரு அணிகளும் மோதும் இந்த போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்க உள்ளது.
Discussion about this post