தேனியில், தனியார் ஹோட்டலில் நடைப்பெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்பு கைகலப்பாக மாறியது, திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனியில், தனியார் ஹோட்டலில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவில் உள்ள பழைய நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் கொதித்த மூத்த நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறகு அது கைகலப்பாக மாறியது. திமுக ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் தாக்கிகொண்டு ரகளையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதால், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், கட்டமைப்பு உள்ள கட்சியில் சேர விருப்புவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
Discussion about this post