தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த நான்கு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் எனத் தெரிவித்துள்ளதுடன் , சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரிசெல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post