பன்னாட்டு நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநராக இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பின், ஐஎம்எப்க்கு நியமிக்கப்படும் 2-வது இந்திய பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது ஐஎம்எப் தலைமைப் பொருளாதார வல்லுநராக இருக்கும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட் விரைவில் ஓய்வு பெற உள்ளார். அதன் பிறகு கீதா கோபிநாத் பொறுப்பேற்க உள்ளார்.தற்போது ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச கல்வி மற்றும் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக கீதா கோபிநாத் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post