குஜராத் பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு சென்றார். உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர், டிரம்பை வரவேற்றனர். அதைத்தொடர்ந்து அவர், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க சென்றார். தாஜ்மகாலின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட டிரம்ப், மனைவி மெலனியா உடன் தாஜ்மகாலின் அழகை சுற்றிப்பார்த்து வியந்தார். டிரம்ப் உடன் அவரது மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஆகியோரும் தாஜ்மகாலை பார்வையிட்டனர்.
Discussion about this post